கடலோரக்கவிதைகள்

பெற்றெடுக்கவில்லை என்னை
அவள் உப்புக்கற்றால்தான் சுவாசம்..
மோட்டாரால் சுழற்றினாலும்
முத்துக்களை அள்ளித்தருவாள்..
கால்தடத்தை மறைப்பது போல்
கவலையையும் மறைத்திடுவாள்..
புயல் கொண்டு பொங்கையிலும்
புதுமையாய் தான் தெரிவாள்..
தாயின்மீது உரிமை வரையறுக்க
யாரால் முடியும்..
எல்லைக்கோடிட்டு வரையறுத்தால்
துக்கத்தில் தான் முடியும்..
துக்கமென்று ஆனாலும் தூயவள்
மடிமட்டும் போதும்..
அவள் அளிக்கும் மீன் சொத்துக்கோ
அளப்பார் இல்லை..
அலை பார்த்து வளர்ந்த எம்அன்புக்கோ
சொல்வோர் இல்லை..