காதலின் காயங்கள்

..."" காதலின் காயங்கள் ""...
(ஆணுக்கும் பெண்ணுக்கும்)

காதலின் மொழிபேசி
மகிழ்ச்சியில் திளைக்க
செய்து இலவம் பஞ்சாய்
இன்பமாய் இதயத்திலே
மிதந்திருந்து இரும்பாகவே
இன்று நீ கனக்கின்றாய் !!!

மெய்மறந்து மெய்யிணைந்து
ரசனையோடு தித்திப்பாய்
நீ பேசிய வார்த்தைகள்
தீயாய்யின்று சுடுவதேன்
கண்ணீர்த்துளி விழுந்திட
வெந்நீர் கொப்பலங்கள் !!!

நீயின்றி நானில்லையென்று
நானே நீயென்று சொல்லி
பிரிந்தால் இறந்துவிடும்
உயிரன்று உடல்மட்டும்
மரணம் ருசிக்கும்வரை
பிணமாய் வாழுமென்றாய் !!!

அன்பினால் ஆசையாய்
கட்டிய நாம் பண்பினில்
படர்ந்திருந்த இறுக்கமான
இணைப்பில் தஞ்சமாய்
புகுந்திட்ட இடைவெளி
தரிசாக்கிவிட்டது காதலை !!!

நீந்தலறியா பிள்ளையெனை
தடாகத்தில் தள்ளிவிட்டே
தத்தளிக்கும் தவிப்பை நீ
தாளமிட்டே ரசிக்கின்றாய்
தங்கமுலாம் தோலுரிந்தே
பித்தளையாய் மாறிவிட்டாய் !!!

காதலின் உரசல்களால்
உருவான வெடிப்புகளின்
காயத்தின் வடுக்களால்
பிரிவினை அறிந்திராத
பிரியமான நம்மிதயம்
பிரிந்தே அழுதுவாடும் !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன். .

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (27-Jul-15, 10:31 am)
Tanglish : kathalin KAYANGAL
பார்வை : 132

மேலே