இறங்கி வா
மெல்லிய உதடுகளால்
புன்னகையிட்டு
மேனியெங்கும் மின்சாரம்
பாய்ச்சி
கனவிற்குள் புகுந்து
நித்திரை கலைத்தவளே...!
எங்கே
சென்றாய் எனக்காக
சுவாசிக்க.....
அறிவாயா?
என்கவிதைக்கும்
காதலுக்கும் ....
ஒரே வயதென்று
அறிவாயா?
அவைஇரண்டும்
ஆரம்பித்ததே
உன்னிடத்தில் தான்!!!
உன்னிடம் போராட
பூக்களைக் கொண்டு வந்தவனை
வாள் எடுத்து வழியனுப்புகிறாயே....
புன்னகையால் நின்னை
நேசிக்கிறேன்
ஏன் கண்ணீராய்
காயப்படுத்துகிறாய்.....
மவுனச்சிறையில்
அடைத்து
ஏன் மரணத்தை
தருகிறாய் .....
மவுனம் உடைத்து
தயக்கம் தவிர்த்து
இத(ழ்)யம் திறந்து
ஏதேனும் சொல்ல
மனமிறங்கி வா!!
நான்
இருப்பதும்
இறப்பதும்
உனது
இ(ர)றக்கத்தில்
மட்டுமே .....