வாசம்!

மலரில் வாசம் போன்றும்!
கனியில் சுவை போன்றும்!
தமிழில் இனிமை போன்றும்!
காலையில் செவ்வானம் போன்றும்!
உடலில் உயிர் போன்றும்!
பாலில் வெண்மை போன்றும்!
கருங்குயிலில் கானம் போன்றும்!
மயிலில் நடனம் போன்றும்!
சங்கீதத்தில் சாரிரம் போன்றும்!
பெண்ணில் நாணம் போன்றும்!
ஆணின் வீரம் போன்றும்!
உன்னில் அவனும்!
அவனில் நீயும்!
இன்புற்று வாழ
மனம் மலர வாழ்த்துகிறேன்!

எழுதியவர் : இரா.குமார்.,பி.லிட். (18-May-11, 7:27 pm)
சேர்த்தது : R.K.Kumar., MMV
பார்வை : 423

மேலே