கருவறை பூக்கள்
நாங்கள் ஆண்களுமல்ல
பெண்களுமல்ல
ஆண்களே பெண்களே கேட்டுகொள்ளுங்கள்
நாங்களும் மனிதர்கள் தான்...
பருவம் எட்டும் வரை வித்யாசம் தெரியவில்லை..
வித்யாசம் தெரியும் போது பெற்ற தாய் கூட மதிக்கவில்லை..
ஆண்களே பெண்களே புரிந்துகொள்ளுங்கள்
நாங்களும் மனிதர்கள் தான்..
குடும்ப அட்டை தருவதுண்டு
வாக்காளர் அடையாள அட்டை தருவதுண்டு
எங்கள் அடையாளங்கள் கண்ட பின்பு
எங்களுடன் நட்பு உறவாட உங்களில் யாருண்டு??
ஆண்களே பெண்களே உணர்ந்துகொள்ளுங்கள்
நாங்களும் மனிதர்கள் தான் ..
கடத்தியாகவும் இல்லாமல்
கடத்தா பொருளாகவும் இல்லாமல் நடுநிலையில் இருக்கும் குறைகடத்திகளுக்கு
தரும் மதிப்பை கூட
இந்த உயிருள்ள குறை கடத்திகளுக்கு தருவதில்லை ஏன்?
இது குரோமோசோம் குறைபாடு
இதற்காக ஏன் இத்தனை பாகுபாடு..
இன்னுமா புரியவில்லை நாங்கள் யாரென்று?
கும்மியடி எங்கள் தேசிய கீதம்
கூந்தாண்டவர் எங்கள் குல தெய்வம் .
உண்மையை சொல்லி அழுகின்றோம்
சிரிப்பு எதற்கு உங்கள் உதட்டோரம் ?
கடவுளின் கண்ணில் படாமலும் karunaikku utpadaamalum
thoovapadum poluthu voramaai viluntha பூக்கள்..
நாங்கள் samuthaaya koyilgalil voramaai viluntha
karuvaraippookkal..
நாங்கள் karuvaraippookkal...
~~thaagu