ஒரு வாய்ப்பு
தாகத்தோடு இருந்து
தண்ணீர் குடிக்க போய்
தலை மாட்டி கொண்டது
தத்தளிக்க இக்காரணம்
கருணை மிக்கவர் வந்து
கழுத்திலிருந்து விடுவிக்கும்வரை
தனிமையிலிருந்து நானும்
தவத்தில் தான் மாட்டிக்கொண்டேன்
வரம் தரும் வாய்ப்பும்
வாழ்க்கையில் கிடைக்கும்வரை
வருத்தி கொள்ளும் பொழுது
வரும் வரும் என்ற நம்பிக்கையில்