யார் சொன்னது
கலாம் காலமானார் !
யார் சொன்னது !
எப்படி தொட முடியும்
காலத்தை வென்றவனை
காலனால் !
அதோ கை கட்டி காத்து நிற்கிறான்
இன்னும் எம் தலைவனின்
காலடியில் !
மடிந்துவிடவில்லை - அவன்
மரணத்தின் மடியில்
உறங்கிக்கொண்டிருக்கிறான் !
எமக்கான கனவுகளை சுமந்தபடி !
எதற்காக கண்ணீர் சிந்த வேண்டும் !
எங்கோ இறந்துவிடவில்லையே அவன்
இதோ இங்கே இருந்துவிட்டானே
என் இதயத்தில் !
இனியும் சொல்லாதீர்கள்
இப்படி !
கலாம் காலமாகவில்லை
இளைங்கர்களின் எதிர்-காலம் ஆனான் !