அவனை திட்ட வேண்டாம்

அவனுடைய இதயம்
என்னிடமல்லவா இருக்கிறது
அவனைத் திட்ட வேண்டாம் !

எல்லா நினைவுகளையும்
என்னிடம் தந்துவிட்டு
நடைபிணமாய் வாழும்
அவனுக்கு என்ன தெரியும்

அவனுடைய வலிகளையும்
என் வலிகளோடு சேர்த்து
நானே சுமக்கிறேன்
அவனைத் திட்ட வேண்டாம்!

என் காதல் தோற்பதற்கு
அவனெப்படி காரணமாவான்
என்னைப் படைத்த இறைவனை
நிந்திக்கிறேன் !

என் வரிகள் வெறும்
காதல் வரிகளல்ல
அவனையே நினைக்கும்
என் ஆன்மாவின் உயிர் வரிகள்

கடவுளை நான் பார்த்ததில்லை
காதலையும் நான் பார்த்ததில்லை
உணர்வதே காதலென்றால்
என் காதலுக்கு உருவமில்லை
வெறும் உருவத்தை மட்டுமே
சுமந்துக் கொண்டுத் திரியும்
அவனை திட்ட வேண்டாம்!

எழுதியவர் : கிட்டிப்பூனை (27-Jul-15, 9:58 pm)
சேர்த்தது : கிட்டி
பார்வை : 280

மேலே