எங்கே நீ சென்றாய்

இளைஞர்களை எழுப்பிய
எளிமையின் உருவே
எங்கே நீ சென்றாய்

அடுத்தத் தலைமுறையின்
அசரீரியே நீயேன்
அதற்குள் அஸ்தமித்தாய்

நாடென்னும் நிலத்தில்
நம்பிக்கை விதைத்துவிட்டு
வளர்வதற்குள் ஏன் வானமேகினாய்

அஞ்ஞானம் அகற்றிய
விஞ்ஞான வித்தையே
எங்கு நீ விரைந்தாய்

கற்பவர் கண்களில்
கனவுகளை வளர்த்தவனே
காற்றுக்குள் ஏன் கரைந்து போனாய்

வழியும் கன்ணீரிலும்
உன் வல்லரசு கனவை
நிச்சயமாய் வார்த்தெடுப்போம்

இரும்பாய் உருமாற்றி
இந்த தேசத்தை
உன் புகழ் பேச வைப்போம்

எழுதியவர் : கொ.வை.அரங்கநாதன் (27-Jul-15, 11:15 pm)
சேர்த்தது : கொவைஅரங்கநாதன்
Tanglish : engae nee senraai
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே