காலம் இழந்த கலாம்

ஏழையாய்ப் பிறந்திட்டாலும்
ஏணியாய் உயர்ந்து நிற்க
நாளிதழ் கொடுத்துக் கற்று
நாட்டினை உயர வைத்து
எளிமையே உருவம் கொண்டு
இலட்சியம் இமையம் தொட்டு
பழமையையை மதித்து நின்று
பைந்தமிழ் கவி படைத்து
குறளினை உலகமெல்லாம்
குறையின்றி ஒலிக்கச் செய்து-தமிழன்
புகழினை விண்ணில் சேர்த்து
பார் போற்றிடும் மேதையாகி
அறமது தவறிடாது
அரசியல் ஆட்சி நின்று
நெறிமுறை வழுவா நெஞ்சில்
நேர்மையை நிலை நிறுத்தி
மதங்களைக் கடந்து நின்று
மக்களின் தலைவனாகி
இல்லறம் துறந்து நின்று -எம்
இதயத்தில் வாழ்ந்து என்றும்
வல்லமை எமக்களித்து
வான் வரை உயர்ந்து நின்ற
அனலது தீண்டா அந்த
அக்கினிச் சிறகு ஒன்று
புனலெனப் பிரவாகித்து
போய் இன்று மறைந்ததெங்கே.

எழுதியவர் : உமை (27-Jul-15, 11:12 pm)
பார்வை : 2414

மேலே