சத்தமன்-அப்துல் கலாமிற்கு ஓர் மடல்

விண்ணில் ஏவுகணைகளை
பாய்ச்சிய நீங்கள்!
இன்று எங்களின்
இதயங்களில் பாய்ச்சி விட்டீர்களே!

வானில் என்னன்ன உள்ளதென்று
காண இந்த மண்ணுலகம் விட்டு
விண்ணுலகம் சென்றீரோ!

இந்தியா 2020
கனவு காண சொன்ன நீங்கள்!
அவசர அவசரமாக ஏன்
2015ல் எங்கள்
கனவுகளோடு கரைந்தீர்கள்!

அக்னிச்சிறகு
இன்று
தன் சிறகை
மீண்டும் திறவாதோ!

காலம்
உள்ளளவும்
கலாம்
எங்கள்
உள்ளத்தில்
வாழ்வீராக!
மெய்ஞானத்தை
பிறப்பிடமாக
கொண்டு!
விஞ்ஞானத்தை
கண்டு!
மெய் மறந்தீர்!

இந்தியாவின்
முதல் குடிமகன்
நீ மட்டுமே!
மற்றவர்கள்
எல்லாம்
அரசியல் பின்புலத்தால்
வந்தவர்களே!
நீ மட்டுமே!
மக்களின் மனங்களில்
நிறைந்தவர் ஆவீர்! (நீங்கா இடம் பிடித்தவர் ஆவீர்!)

அக்னிச்சிறகுகள்
பக்கம் 140ல்...
பேராசிரியர் சாராபாய்
மாரடைப்பால்
அவர் உயிர் பிரிந்தது!
என்று கேள்விப்பட்டு!
நான் இடிந்து போனேன்!

என்று கூறியுள்ளீர்!
இன்று
நாங்களும்
அதே மன நிலையில்
தான் உள்ளோம் ஐயா!
எங்களுக்கு மீண்டும்
ஒருமுறை காட்சி தாருமையா!

சிறகு
தீயில்
புதையலாம்!
அக்னிச்சிறகு
எரியுமா?
புதையுமா?

எரியும்
ஏவுகணை
ஜுவாலைக்கு
தன்னையே
மெழுகாய்
உருக்கியவரே!

எங்கள்
கண்ணீரில்
கசிந்து விடாதீர்!
எங்கள்
இதயத்தின்
இரத்த ஓட்டமாய்
எப்பொழுதும்
இயங்குவீராக!


~தங்கள் பிரிவால் வாடும் இந்திய குடிமகள்...
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Jul-15, 11:29 am)
பார்வை : 1224

மேலே