கனா காலங்கள்
மறக்க முடியுமா அந்த
நாட்களை..
காலையில் எழுந்து கிடைத்ததை சாப்பிட்டு
இடுப்பில் தாங்கமல் அவிழும் டவ்சருடன் பள்ளிக்கு ஓடியதை
வெள்ளியன்று இரவில்
ஒலியும் ஓளியும் பார்த்து
ரசித்ததை
ஞாயறான்று சக்திமான் பார்த்து ரசித்ததை
கண்மாய் நீரில் குதியாட்டம் போட்டு கண் சிவந்ததை
நண்பர்களுடன் ஓணான் பிடித்து விளையாடியதை
பட்டாம்பூச்சியை பிடித்து வாலில் நூல் கட்டி பறக்க விட்டதை
அப்பாவின் பையில் திருட்டு தனமாய் காசெடுத்து திண்பன்டம் வாங்கி தின்று அம்மாவிடம்
அடிவாங்கியதை
தீபாவளி அன்று சீக்கிரம் எழுந்து குளித்து புது ஆடை அணிந்து பட்டாசு வெடித்ததை
பொங்கலன்று கரும்பு தின்று வாய் புண்ணாணதை
காய்ச்சலின் பொது
டாக்டரின் ஊசிக்கு
பயந்ததை
பள்ளி விடுமுறையில் பாட்டீ வீட்டுக்கு சென்று வந்ததை
மழை பெய்து தேங்கி நீன்ற நீரில் குதித்து மகிழ்ந்ததை
இன்று எல்லாவற்றையும் காலம் என்னிடமிருந்து பறித்துக் கொண்டது
அவை மீண்டும் வருமா? —
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்பருத்தி பூ...
hanisfathima
08-Apr-2025

ஆன்மா விடைபெறுகிறது...
தாமோதரன்ஸ்ரீ
08-Apr-2025
