அப்துல்கலாம் ஓர் ஆச்சர்யம் - கலித்துறை

கண்ணோடு நீர்பேசும் நேரம்கவிதை யில்என்ன சொல்ல
தூதர வர்தூரம் சென்றுவிட் டார்துக்கம் என்னைக்கொல்ல
அவர்புகழ் நானு ரைக்கஎழ வில்லை மொழி
கதறித் தான்அழுகி றதேஅந்த தமிழுக் கும்வலி!

அயல்நாட் டில்புற நானூறு பொருள் கொடுத்தவர்
அகிலம் துறந்து சென்றுவிட் டார்கனவு காண
கற்றுக்கொடுத் தவர்கனவை விட்டு கண்மூடி விட்டார்
சபதம் ஏற்றிடு வோம்அவர் கனவைநன வாக்கிடவே!

என் கலித்துறை படைப்பிற்கு வழியமைத்த மதிப்பிற்குரிய வ.க.கன்னியப்பன் ஐயா அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

எழுதியவர் : deeku (28-Jul-15, 12:10 pm)
பார்வை : 120

மேலே