கலாமிற்கு கவிதாஞ்சலி-3

கலாமிற்கு கவிதாஞ்சலி
சாரல் வந்த நேரம்
சலசலப்பு சத்தம்
மழையின் பொழிவா -இல்லை
கலாமின் மறைவு.
உறவுமில்லை நட்புமில்லை
ஆனாலும் ஓர் பந்தம்.
முகவை நம் மாவட்டம்
சுவார்ட்ஸ் நம் பள்ளி
மாநிலம் தமிழ்நாடு
பாரதம் நம் நாடு.
அடிமட்ட வாழ்க்கையில்
அச்சாரம் போட்டு
விழிபட்ட இடமெல்லாம்
விஞ்ஞானமும் கொண்டவரே
அஞ்ஞானமும் உன்னை
கை விட்டதோ.
எளியவறே தூயவரே
சொல்லிய வண்ணம்
இயல்பாய் பிறந்தாய் இணையில்லா சரித்திரம்
படைத்தபின் இறந்தாய்.
உனக்கென ஏதுமில்லை
உனக்கு நிகர் யாருமில்லை
உழைப்பிலும் உத்தமத்திலும்.


அலைபோல் சுருள்முடி
ஆழிபோல் பரந்த மனம்
இணையில்லா புன்னகை
ஈட்டி போன்ற விழிகள்
உழைப்பே உன் சுவாசம்
ஊரெங்கும் உன் நேசம்.
எளிய உள்ளம்
ஏணியின் குணம்
ஐம்பொருள் அடக்கம்
ஒற்றுமை உன் முழக்கம்
ஓயாது உழைத்தாய்
சொல்லாது ஏன் மரித்தாய்?

சுனாமி இல்லை
சூறவளியுமில்லை
பாரெங்கும் ஓலம்
கரையெங்கும் ஈரம்
கலாமே கண்ணியமே
தூய்மையே தீபமே
நீ காலமானதால்.
சோம்பல் முறித்து
சோதனை எதிர்த்து
உன் குரல் மதித்து
கனவை நிஜமாக்க
படையெடுக்கும் நேரம்
எமன் எடுத்துவிட்டான் உன்னை.
கனவை கலைக்கவா
உன் உடல் புதைக்கவா
வியாகுல வேதனையில்
அந்த இறைவனை தான்
வெறுப்பதா.....
கிழக்கு கடற்கரை வித்து
தமிழனின் ஆணிவேர்
தாயகத்தின் கேடயம்
விதிக்கு இரையாகி
மதிக்கு விடைகொடுத்த
இந்தியனின் இருண்ட நாள்
தன்னலமற்ற ஞானி
இறந்த நாள்.
பள்ளியும் கல்லூரியும்
கருவறையாகட்டும்
ஆயிரம் கலாம்கள் உருவாகட்டும்
கலாமின் கனவுகள் நனவாகட்டும்
நம்நாடு பேரரசு ஆகட்டும்.
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

------------------------------------------------------------------------------------

எழுதியவர் : செபஸ்டின் மாணிக்கம் (28-Jul-15, 6:31 pm)
பார்வை : 393

மேலே