கலாமே உமக்கு சலாம்
கனவு காணச் சொன்ன கலாமே!!!
நீர் கனவாகிப் போனதால்
உறைந்தது எம் உடல்.
உறையாடி கலைத்து விட்டதால்
உறக்கம் தேடி சென்றுவிட்டாயே!!!
விட்டுச் சென்றது ஒன்றா இரண்டா,
நேர்மையான இருதயம் அழகிய குணத்திற்க்கும்,
அழகிய குணம் அமைதியான வீட்டிற்க்கும்,
வீட்டில் அமைதி ஒழுங்கான நாட்டிற்க்கும்,
நாட்டில் ஒழங்கு உலகின் அமைதிக்கும்,
இட்டுச் செல்லும் என்றாய்.
தலைவனுக்கான பண்புகளை அடுக்கினாய்
முதலில் ஏற்று நீயேவாழ்ந்தாய்!!!
எளிமைக்கு புதுஇலக்கணம் சொன்னாய்
எடுத்துக்காட்டாய் நீயே நின்றாய்!!!
விருதுகள் தேடி வந்தும் வீண்கர்வம் இல்லை!!!
பதவிகள் நாடிவந்தும் பண்பில் மாற்றமில்லை!!!
இலட்சியம் கொள்,
அறிவு பெருகும்,
விடாமுயற்சி வரும்,
புத்தகங்களை நாடும்,
துவளாமை கொள்ளும் என்றாய்.
புன்னகை மாறாத இதழ்கள்,
என்றும் புன்னகைக்கும் மலர்களாய்.
இன்றைய இளைய மொட்டுக்களே,
நாளைய வளர்ந்த சமுதாயமென்றாய்.
என்றும் அவர்களோடே விளையாடினாய்,
நிதம் நிதம் உரையாடினாய்,
அவர் மனங்களோடு மகிழ்ந்தாடினாய்,
மகேசனாய் நின்று விட்டாய்.
கைச்சட்டைக்கோ,
கால்ச்சட்டைக்கோ,
பிரியம் கொள்ளாதவன்
கண்ணீர் துடைக்க கைக்குட்டையை
என்றும் நீட்டிய எங்கள் கோனே
ஒவ்வொருவரையும் காண்பது அரிதென
காற்றோடு கலந்து எங்கள்
மூச்சாகி நிற்க்கிறாயே!!!
சொர்க்கமே சிரிக்கிறாயோ,
கடவுளே மகிழ்கிறாயோ,
உம் அன்பு மலர்
உம் பாதங்களை அடைந்ததற்காக.
கரம்கூப்பி,
தலைசாய்த்து,
வணங்குகிறோம்
தலைவா.
உயிர் பிரியலாம்,
உடல் மறையலாம்,
உம் வார்த்தைகள் அழியாது,
காட்டிய பாதைகள் முடியாது.
கண்ணீருடன்
கலாமே உமக்கு சலாம்.