விண்ணில் மறைந்த ஏவுகணை

ஆற்றல் (Aatral )
படைத்த (Padaiththa )
ஜாம்பவான் (Jaambavaan ) - அப்துல்கலாம்
A .P.J அப்துல்கலாம்.
விஞ்ஞானம் கண்டுபிடித்த
மெய்ஞானமே - நீ
காணோமே.
கடைக்கோடி ராமேஸ்வரம் - அந்த ஆழ்
கடலில் கேட்குது அபஸ்வரம்.
நல்லரசு இந்தியாவை
வல்லரசு ஆகும் என்றாயே.
செயலரசு ஆகும்முன் எங்கு சென்றாயே.
சப்தநாடியும் அடங்கும் வகையில்
சகாப்த ஏவுகணையை ஏவிவிட்டாய்.
சாதிக்கத் தெரியாதக் காலனவன்
சாவுகணை ஏவி உன்னை
சாய்த்துவிட்டான்.- அவனுக்குத் தெரியாது போலும்? - நீ
சாகாவரம் பெற்ற சகாப்தத்தின் மனிதன் என்று?
சரித்திரத்தின் சுவடுகள் நிறைவதற்குள்
சாதனையாளன் ஆன உன்னை - மரணத்தின்
வேதனையில் மயக்கிவிட்டானே.
காந்தி,நேரு காலடித் தடங்களில் - நீ
காலூன்றி நடந்ததைக்
கலைத்துவிட்டான் தடங்கலில் - மாரடைப்பு எனும்
மயக்க ஊசியில் தன்மடி மீது
வீழவைத்தான் அடங்கலில்.
மண்ணுக்குள் மின்னிய வைரத்தை
விண்ணுக்குள் மிளிர வைக்க - தேச மக்களின்
கண்ணிலிருந்து பறித்து விட்டானே.
அறிந்தவரை அறிவாற்றலை அறியவைத்தவரை - தேசம்
அறிந்த அவரை அபகரித்துக் கொண்டானே.
பிள்ளைகளோடுப் பிள்ளையாய்,
மாணவர்களோடு மாணவராய்
இளைஞர்களோடு இளைஞராய்
விழைந்தவரை விழிமூடி அழைத்துக் கொண்டானே.
ஈன்ற பெற்றோருக்கும்
ஈர்த்த இந்தியாவிற்கும்
ஈடில்லாப் பெருமைத் தேடித் தந்தவரை
ஈனமின்றி,ஊனமின்றி ஈர்த்துக் கொண்டானே.
ஏழைப் பங்காளனையும்
தோழமை ஆக்கிய தூயவனான உனது
ஆழமையை அறியவா அழைத்துக் கொண்டான்.
ஆளுமையை அறியவா அழைத்துக் கொண்டான்.
விஞ்ஞான உலகமும், மெய்ஞான உலகமும் - இன்று
விண்ணில் மறைந்த ஏவுகணையைத் தேடுகிறது.

எழுதியவர் : சு.சங்கு சுப்ரமணியன். (31-Jul-15, 5:04 am)
பார்வை : 222

மேலே