அவளாயணம்
அவளாயணம்
============
மேலும் நெளியாதே
இடைமடிப்பில் சிக்கிய விரல்கள்
அல்லோலப்படுகிறது கூச்சத்தில்
வியர்வையால் வளர்ந்த வண்டுமரம் போல்
வேரின்றி பறக்கிறது புடவை காய்ந்த பாகம்
வாடை தெளித்து தீட்டுகளை புனிதமாக்குகின்றனவா ,,
கரியமில வாயும் பிராணவாயுவும்
நுனிமூக்கும் வாயும் கோள்மூட்டி
இருவருக்குமட்டும் தெரிந்ததால்
இது அந்தரங்கமில்லை போல்
மறைக்கப்படாத எதுவும் வெறுக்கப்படுவது
இல்லை இதில் ம்ம்ம்ம்
இருட்டில் கிறுக்கியவைகள் ஈரம் காயாமலிருக்க
புலரின் புலன் துலக்குதல்களில்
மௌனிக்கின்றன
நேரிட்டுப் பார்க்க இயலாத
ஜன்னலோரம் காதோரத்த புன்னகைகள்
திக்கிமுக்காடிய திட்டுகளில்
புதுத் தெம்பு பிறக்கும்
முதுகெலும்பு வளைய
திசுமாற்றம் நேரிடலாம் அவளுக்கு
எதுவும் பொய்யில்லை என்பதைப்போல்
மூக்குத்தியின் வன்மம்
பிறரால் அரசல் புரசலாக
அம்பல் செய்யக் கூடும் அவனுக்கு
காய்ந்த உதடுகளில் எச்சில் தடவும் போதெல்லாம்
பாம்புபோல் எச்சரிக்கை சொல்லும்
நாவின் நுனி கூடல்கள்
சரியாக முட்டவில்லையாம் வார்த்தைகள்
காய் விடுகிறாள்
புன்னகைவிரிக்கக் குடு
விட்ட வார்த்தைகளை தைத்து
கெட்டவார்த்தைகள் செய்
நீ ஆணாகும் சந்தர்ப்பத்தால் ம்ம்ம்
பழமாக்கு அவளின் மேல் கன்னங்களை
வதனம் நோகடி
அணைப்பின் இடுக்குகளில் தோல் முட்டட்டும்
அவள் நெளிய ஓர் "அவளாயணம்" செய்
தொலையாத இறுக்கங்களில் வாழ்ந்திரு
கிளைமாறும் குரங்கு மனமாய்
பெண் தின்ற பொறாமைகள் நீளட்டும்
கோழை செய்யாத பார்வைகள் பின்னால்
அமிலம் மாறி அணைய
குளிர்ப்போர்த்தும் இளமைத்திருடி
அவள் கூந்தல் காடு நுகர்
அணைப்புகளும் முத்தங்களுமாய்
சிறகுகள் முளைக்க மிளிரும் அடுத்தடுத்த நொடிகள் ம்ம்ம்
அணுக்கள் புடைத்தெடுக்க
அடம்பிடித்த முனங்கல்களாக
அம்மம்மா போதும் ம்ம்
ஆங்கிலம் தவிர்
பருவநிலா அவையத்தில்
உஷ்ணநாலி ஊற்றெடுக்க
பால் தெரியா பருபூக்கும் பார்த்து ரசி ம்ம்ம்ம்
அனுசரன்