அப்துல் கலாம் ஐயாவுக்கு -அஞ்சலி
அகிலத்தையே அதிரவைத்த
அப்துல் கலாமே அணு விஞ்ஞா னியே
மூத்த குடிமகனாய் முப்படைகளின்
தலைவனாய் தமிழ் இனத்தின்
தலைமகனாய் தமிழனாய் பிறந்து
இந்தியனாய் வாழ்ந்த அன்பின் உருவே
அழியா புகழோடு அகிலம்
உள்ளவரை உன் புகழ் பாடும்
உன் பாரத தேசம் ...
அமரராகி ஆண்டவனை
அடைந்தாய் அணையா விளக்காய்
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்
என்றும் உங்கள் நினைவுடன்
வாழும் நாங்கள் இனி எங்களின்
எண்ணமும் செயலும்
உந்தன் கனவை நனவாக்குதலே

