ஏவுகணை அறிவியல்

சிக் என ஒட்டிக் கொள்கிறாய்..
நான் வளைத்த வளைப்புக்கு மட்டும்
வர மறுக்கிறாய்..
நார் நாராக்கி
கிழித்து விடவேண்டுமென்று
ஆத்திரமும் வருகின்றது..
என்ன செய்வது...
ஊருக்கு சென்றுவிட்ட
என் மனைவியிடம்
வந்ததும் ஒத்துக் கொள்ளவேண்டும்...
குளிர்பதன பெட்டியில்
எனக்காக வைத்து
விட்டு சென்ற தோசை மாவே..
தோசை சுட்டெடுப்பது
ஏவுகணை அறிவியல்தான் என்று ..

எழுதியவர் : ஜி ராஜன் (31-Jul-15, 9:59 am)
பார்வை : 119

மேலே