அப்துல்கலாம் அவர்களுக்கு ஓர் இரங்கல் கவிதை
:
இந்தியா - இளைஞர்களின் கையில்
என்ற உண்மையை உலகிற்கு உரைத்த உத்தமரே.
உம் மூளையை
அமெரிக்காவிடம் அடகு வைத்திருந்தால் கோடிகளைக் கொண்டு வந்து குவித்திருக்கலாம்.
வல்லரசுகளிடம் விலை பேசியிருந்தால் வானத்தையும் வளைத்துப் போட்டிருக்கலாம்.
ஆனால் நீங்கள்
இன்னொரு ஜென்மம் என்றொன்றிந்தாலும் இந்தியாவிலே பிறப்பேன் என்றீர்கள்.
அரசியலில் கறை படிந்த கைகளாேடு கை குலுக்கினாலும் உமது கையில் கரையில்லை.
நீங்கள் தீவிர முஸ்லீம் தான் .ஆனால்
சொந்த மதத்திற்காக
எந்த மதத்தயைும்
எட்டி உதைத்ததில்லை.
முடியில்லா மனிதர்களே மூன்று தாரங்களாேடு வாழ்கிற இக்காலத்தில், முடியரசராகிய நீங்கள்- முற்றும் துறந்த முனிவராய் ,
ஆசா பாசங்களுக்கு அப்பாற்பட்டாவராய் வாழ்ந்தீர்கள்.
தாரமிருந்தால் தாயை (தாய்நாட்டை ) தள்ளி வைக்க நேரிடுமென்றா?
நீங்கள் வெடித்த அணுகுண்டில்
அமெரிக்காஅதிர்ந்தது.
பாகிஸ்தான் பயந்தது.
வல்லரசு நாடுகள் வாய் மேல் விரல் வைத்தன.
எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசும் மாணவர்கள் , உம் பேச்சுக்கு முன் மகுடி ஊதிய பாம்பாய்
மயங்கி நின்றார்கள்.
அதுவரை அரசியல் தலைவர்கள் இறந்த செய்தியென்றால் அரசுவிடுமுறை கிடைக்குமா ?
என்று எதிர்பார்த்த மாணவர்கள் ,
உம் இரங்கல் செய்தி கே ட்டு ஒன்றுகூடி அழுகிறார்கள் .
நீங்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்டு,
பிரம்பால் அடித்த ஆசிரியர் அல்ல.
மாணவர்களை கேள்வி கேட்க செய்து,
அவர்களின் அறிவுப் பசியைத் தூண்டிய ஆசிரியர்.
நீங்கள் ஆசிரியரென்று அறிவுரை கூறி ,
எவர் காதிலும் இரத்தம் வரவைக்கவில்லை.
தூக்கலித்திருந்தவர்களைத் தட்டி எழுப்பினீர்கள்.
மாணவர்களோடு
மாணவர்களாக உருமாறி
உரையாடினீர்கள்.
நேர்மறை அணுகுமுறையால் நேசங்கலந்தீர்கள்.
பாகற்காயையும் பதமாக ஊட்டினீர்கள் .
சுதந்திரக் கனவுகளை
சிறகு முறிக்காமல் சிக்கெடுத்தீர்கள்.
இந்த விட்டில் பூச்சிகளுக்கா விளக்கு பிடிக்கிறீர்களென்று ,
உங்களிடம் சிலர் வினவிய போது
'இன்றயை விதைதான் நாளைய விருட்சம்'
என்றீர்கள்.
நீங்கள் விதைத்த விதை வீண்பாேகாது.
உங்கள் கனவுகள் காட்சிகளாய் மாறும் நாள் வெகு தாெலைவில் இல்லை.
ஆங்கிலப் பள்ளிகளில் அலை மோதும் கூட்டத்திற்கு முன்,
உரக்கச் சொல்கிறேன் -
நீங்கள்
அரசு பள்ளியில் படித்து அணுகுண்டு சாேதனை நிகழ்த்தியவரென்று
தாய்மாெழியில் கல்வி கற்று
தாய்திருநாட்டை ஆண்டவரென்று.