இந்தியாவின் எழுச்சி நாயகன்

கல்வி ஒன்றே
நம் நாட்டின்
களையை பிடுங்கும்
மருந்து என்று கருதி!!....

இன்றைய
இளைஞர் சமுதாயமே
நாளைய
இந்தியாவின் எதிர்காலம்
என்று குரல் கொடுத்து !!.....

குரல் வெறும்
குரலாக அல்லாமல்
நீர் பேசும் ஒவ்வொரு
மேடையிலும் நம்
தாய் தமிழ் மொழியில் பிறந்த
திருக்"குறளை" போற்றி
மாணவர் நலனில் அக்கறைகாட்டி !!....

ஒவ்வொரு
மாணவனின் உள்ளத்திலும்
எழுச்சி விதையை விதைத்து
இந்தியாவின்
எழுச்சி நாயகனாக உருவெடுத்து!! ....

இன்று
அகிலமே
நம் பாரதத்தை
வியப்போடு பார்க்கும் படி
விஞ்ஞானத்தில் பெரும்
மாற்றத்தை கொண்டுவந்து !!....

வீதிக்கு ஒரு ஜாதி
அந்த ஜாதிக்கொரு கட்சி - என்ற
நம் திருநாட்டில்
ஜாதி மத வேறுபாடின்றி- அனைத்து
இந்திய மக்களுக்கும்
ஓர் சிறந்த தலைவனாய் மாறி !!...

நீர் பார்க்க ஆசைப்பட்ட
பாரத தேசத்தை காணும் முன்னே
எங்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி
இம்மண்ணுலகை விட்டு
விண்ணுலகம் சென்றது ஏனோ!! ...


ஆனால்
ஒன்று மட்டும் உறுதி ......
"நீர் புதைக்கப்படவில்லை!!.."
ஒவ்வொரு
இந்தியரின் உள்ளத்திலும்
நாம் நாட்டை வல்லரசாக்க
விருட்சமாய்
"நீர் விதைக்கப்பட்டுள்ளீர்!!...."

எழுதியவர் : பிரதீப் நாயர் (31-Jul-15, 1:45 pm)
பார்வை : 329

மேலே