நட்பு

நல்லது கெட்டது சொல்லி தந்து
நலம் மட்டுமே விரும்பி
நாளெல்லாம் அரும்புது நட்பு !
பாலினம் பாராது ..
பாகுபாடு காணாது ....
பாசமாய் தொடருது நட்பு !
அழுதபோது துடைத்து
அன்புடனே அணைத்து
ஆனந்தமாய் தொடருது நட்பு !
வேதனையில் கூட வந்து
சாதனையில் சந்தோசம் கண்டு
சோதனை விரட்டுது நட்பு !
போகுமிடமெல்லாம் கூட வருது
போய் தொலைன்னு சொன்னாலும்
கூடவே வருது நட்பு !
அம்மாவின் நட்பு அரவணைப்பு
அப்பாவின் நட்பு உழைப்பு
அன்பனின் நட்பு ... நட்பு -தினம்
அசையாமல் கூட வருது ...
வா வா ..நட்பே வா ..
வா என் நண்பனே வா ..
என்றும் நண்பனாய் என்னோடு வா !

எழுதியவர் : (31-Jul-15, 9:36 pm)
Tanglish : natpu
பார்வை : 642

மேலே