உள்ளத்தில் பூத்த நட்பு- முஹம்மத் ஸர்பான்

சுமந்த வயிறு வேறு
இரு நெஞ்சமோ ஒன்று
பாசமெனும் தாரகைகள்
நட்புஎனும் வான்பரப்பில்
ஒளி வீச நீயில்லையே,,,,!!

பிரிந்து சென்றாய்...!!
நெஞ்சில் விளைந்தது அக்கினி
மூட்டம்;கண்ணில் பாயும்
காவிரி ஊற்று;என் செவிகளில்
கேளும் உன் தொனிகள்
என்னை கொல்லுதடா....?

இணைந்திருந்து...,
சுவைத்த உணவின் வாசம்
என் கைகளில் மாறல்லையே..!!
நடந்த பாதைகள் வா வா என்றது
அமர்ந்த மர நிழல் தேடுதடா..??

உனைக் கண்டது நீலக் கடலோரம்.
அமர்ந்திருந்து தூதுவிட்டேன்,இளநாரையிடம்..,
மீனவன் வாடை சுமந்த தென்றலும்
நெய்தல் நில பூக்களும் நம் நினைவை
மீட்டி நிழலாய் தந்தது.

உன்னைக் காணும் முன்
கல்லறைக்கு நான் சென்ற
தூது எட்டினால்,என்னிடம்
ஓடோடி வா,என் மடியில்
விளைந்த பச்சைப்புற்களில்
தலை வைத்து தூங்கடா?நான்
பாடும் நட்பின் தாலாட்டை கேளடா??

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Aug-15, 9:47 am)
பார்வை : 268

மேலே