மனமில்லை

எழுதிக் கரைக்க மனமில்லை !
என்றோ ஒருநாள்...
நீ தந்த உன் பேனா !!
தூக்கி எறிய மனமில்லை !
வருடம் முடிந்தும்...
உன் பெயரில் காலண்டர் சாமி !!
உண்ண மனமில்லை...
உறங்க மனமில்லை...
ஊர் சுற்ற மனமில்லை...
என்ன செய்வேன் !
எதற்கும் மனமில்லா...
இந்த மானமில்லா மனதோடு !!!