உன்னை பிரிந்த போது....

கண்ணுக்குள்ள உன் நினைவு
கனவாக வருகிறது
காகிதத்தில் எழுதிய
கவிதைகள் அழுகிறது
உன் நினைப்பினாலே தான்
உயிரோடு வாழுகின்றேன்
உனை மறந்தாலே
என் ஜீவன் மண்ணில் இல்லை

உனக்காய் காத்திருந்து காத்திருந்து
காலங்கள் கழியுதடி
உனை காணாமல் காணாமல்
கண்களும் வலிக்குதடி
கடற்கரை அலைகலெல்லாம்
கரைக்குத்தான் சொந்தமடி
காதலித்த என் மனசும்
உனக்குத்தான் சொந்தமடி
உன்னோடு சேர்வதற்காய்-என்
உள்ளம் அலையுதடி
உண்ணாமல் உறங்காமல்-என்
ஜீவன் தவிக்குதடி

இரவிலும் பகலிலும்
உன் நினைப்பு வருகிதடி
இதய துடிப்புக்களும்
உன் நாமம் சொல்லுதடி
விழிகளில் ஈரமென்றால்
விடியலும் சோகமடி
விதியின் பயணமொன்றில்
மனமிங்கு பாவமடி
நிழலிலும் உன்உருவம்
தினந்தோறும் தெரியுதடி-இன்று
நினைவிலும் உன்ஜீவன்
என்னோடு வாழுதடி

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:30 am)
பார்வை : 333

மேலே