அன்னை உருவில் அவள்

என் அலைபேசி அலைவரிசைக்குகூட
என்னைத் தொடரும் எண்ணம் இல்லை !
எல்லை தாண்டியதால் !

இங்கும் எனைத் தொடர்வது
என் தங்கையின் அன் பொன்றே !

விடை கொடு என்று சொல்லி
விரைந்துவிட்டேன் !
விடைகோடா விடை கொடுத்தாள் !

நெடுன்தூரம்தான் என் பயணம்
எங்கும் தனிமையை
உணரவில்லை நான் !

உடன் வந்து எனை
இம்சித்த உணர்வு !

உறக்கமில்லா என் பயண
இரவில் எனை
உறங்கவைத்த தாலாட்டு
அவள் குரல் !

பசி மறந்தபோதும் எனை
பசியாற வைத்தாள் !

என் உடல்நலனில் எனக்கில்லா
அக்கறை என் குட்டி தேவதைக்கு !

அவள் அழைக்காத நேரத்திலும்
செவியருகே அவள் குரல் !

அருகில் இல்லை ஆனாலும்
அன்னை உருவில் அவள் !

எழுதியவர் : முகில் (4-Aug-15, 8:08 am)
Tanglish : annai uruvil aval
பார்வை : 669

மேலே