விடியல் தேடு
வறுமை இருள்
வாழ்க்கை துன்பம்
அடுத்தது புரியாமல்
அவரவரில் குழப்பம் ............
எத்தனையோ தோல்வி
எதிர்காலம் கேள்வி
புத்தியில் சோர்வு
புலம்பலே வாழ்வு .............
வாழ்க்கையே முடிந்துவிட்டதாய்
எத்தனையோ மனங்களில்
இனம்புரியாத பயம் -
விரக்தியின் உச்சம் ...........
வறுமையின் வட்டத்தினால்
வாழ்க்கையோ வாட்டம்
விடுதலை என்று என்பதுதான்
கேட்பவர்களின் கேள்வி ...........
முயற்சிகள் செய்தோம்
முடியாமல் போனது
இதுதான் பெரும்பாலானவர்களின்
பெரும்பாலான கருத்து ..........
இருந்தும் ,
மனிதனால் முடியாத
உலகத்தில் இல்லை ...........
முயற்ச்சிகள் தோற்கலாம்
முயற்ச்சிகள் எல்லாம் தோற்பதில்லை -
இது அனுபவ கூற்று ..........
கடமைக்காக செய்யும்
எந்த ஒரு செயலிலும்
வெற்றிகள் விளைவதில்லை -
கடும் உழைப்புகள் மட்டுமே வெற்றிகளுக்கு வித்திடும் ..........
பாறைக்குள்ளே சிறைபட்டும்
வெளிச்சம் தேடி முளைக்கவில்லையா
எத்தனையோ விதைகள் -
இங்கு தோற்பது பாறைகள்தானே.........
அளவிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லாமலேயே
உயரமாய் ஆழமாய்
புற்றொன்று கட்டி
புழங்கவில்லையா கரையான்கள் ............
யானைகள் மட்டுமே
வாழவில்லை இப்பூமியில்
எறும்புகளும் தான்
வாழ்கின்றன ..........
எல்லோருக்கும் சமமாய்
வெற்றியும் தோல்வியும்
எவருக்கும் நிரந்தரமானதல்ல
எதுவுமே ...........
போராடி ஜெயித்தவர்கள்தான்
பூமியில் அதிகம்
போராட்டமே இல்லாமல்
எந்த ஒரு சாதனையும் சாத்தியமில்லை ............
விடியல் வேண்டும்
என்கிற கனவுகளோடு
கண்களை மூடிக்கொண்டால்
விடியல் பிறந்திடாது ...........
முயற்ச்சிகளின் தொடர்ச்சியே
விடியலின் விலாசத்திற்கு
உம்மை இட்டுசெல்லும் ..................