கிராமத்து கதை

நகர்ப்புற நரக ஆக்கிரமிப்புகளில்
கிராமங்கள் தினமும்
தொலைந்த வண்ணமாய் ...........

சுத்தமான காற்றும்
சுமூக சூழலும்
எத்திசையிலும் ஒளிரும் பசுமையும்
பரவலாய் மறைந்துகொண்டே .............

கற்களின் ஆக்கிரமிப்பால்
காணிகள் மனைகளாய் சிதைந்து
சிறு சிறு எல்லை கீத்துகளாய் ..........

ஆறும் ஓடையும்
அம்மன் விழாவும்
பொங்கல் படையலும்
புதிய தோரணங்களில் திரைப்படங்களில் மட்டும் ............

மாலை நேர தென்றலும்
மயக்க தூக்கமும்
மஞ்சு விரட்டும்
மங்காத வீரமும் ..............

உழைத்த உழைப்பும்
உடற் பயிற்ச்சி இல்லா உடல் கட்டும்
தெளிந்த நேர்மையும்
திறந்த மனங்களும் ............

நகரமென்னும் நரக ஆக்கிரமிப்பில்
அழிவின் அடுத்த நகர்வில் ............

கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Aug-15, 8:56 am)
Tanglish : kiramaththu kathai
பார்வை : 63

மேலே