ஜனநாயகமா இது

நியாயமாய் போராடிய
மாணவர்கள் மீது
கொலைவெறி தாக்குதல் .............

புனித பிறப்புகளுக்கு
பூட்ஸ் கால் உதை.............

நியாயமான போராட்டத்தில்
அநியாயமாய் அடிதடி .............

எங்கே போகிறது சமூகம் -
சமுதாய மாற்றத்தினை முன்னெடுக்கும்
மாணவ சமுதாயத்திற்கே இந்த கெதியா ...........

இந்தியாவின் முதுகெலும்பு
பாரதத்தின் தூண்கள் என்பதெல்லாம்
வார்த்தைகளில் மட்டும் தானா ?

தேவையில்லாததை எதிர்த்து
தேவையான போராட்டம் -
இது காலத்தின் கட்டளை ............

குடித்து சீரழியும் மனித உறவுகளுக்கு
மாற்றம் தேடும் மார்க்கம்தானே இது -
ஏன் ஏற்றுக்கொள்ள எண்ணம் இல்லை ............

அரசாங்கத்தின் அத்துனை செயல்களுமே
மக்களின் நலனுக்காகத்தானே ?
பின் ஏன் இந்த நிலைமை ?

அராஜக போக்குகள்
மாணவ சமுதாயத்திடம் தோற்றதே வரலாறு -
அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ளட்டும் ...........

துரத்தி துரத்தி தாக்குவதற்கு
மாணவர்கள் தேச துரோகிகளா
இல்லை தீவிரவாதிகளா ?

தேசத்தின் நலனை முன்னெடுத்து செல்லும்
ஒவ்வொரு மாணவ மாணவியரின் செயலும்
தியாகத்திற்கு சமமானதுதான் ............

சமூகத்தை சீரழிவிலிருந்து மீட்கும்
மாணவ சமுதாயத்தின் மீது மரண தாக்குதல் -
இயல்பானதாக ஏற்றுக்கொள்ள முடியாது

இது ஜனநாயகத்தின்
சரியான மார்க்கமும் கிடையாது -
அரசாங்கமே அலோசி ?

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Aug-15, 9:19 am)
பார்வை : 60

மேலே