மறக்கவும் இல்லைநான் ஒரு கனவை

கனாக் கண்டேன்நான் ஒரு இரவு
கடற்கரை மணலில் ஒரு நாள் !
களைப்பாய் அமர்ந்தேன் ஒரு ஓரம்
கண்ணெதிரே காட்சிகள் ஒரு திரையில் ...

நினைத்தேன் வாழ்வை ஒரு நிமிடம்
நினைவுகளின் பயணம் ஒரு படகில்
நினைத்ததில் பலஇனித்தன ஒரு புறம்
நினைத்ததால் சிலகசந்தன ஒரு வினாடி ...

கடந்திட்ட நிகழ்வுகளோ ஒரு கடல்
கண்களில் நிற்பதோ ஒரு கண்மாய் !
கனவில் வருபவை ஒரு திரைக்கதை
கலக்குது சிலவேளை ஒரு திகில்கதை !

வினாக்கள் பிறந்தன ஒரு அணியில்
விடைகள் தேடினேன் ஒரு வரியில்
விளங்கிட என்னுள்ளே ஒரு துடிப்பு
விரிவாக விளக்கிடவே ஒரு விருப்பு ...

மனதில் தோன்றியது ஒரு கேள்வி
மண்ணில் சாதித்தவை ஒரு பகுதி !
மறைவின்றி சொல்நீ ஒரு விடையில்
மற்றவரும் அறியவே ஒரு பத்தியில் !

மனதும் உறுத்தியது ஒரு வலியுடன்
மனசாட்சி சிரித்தது ஒரு கேலியுடன் !
மற்றவர் அளவிற்கு ஒரு சாதனையும்
மனம்குளிர நிகழாதது ஒரு வேதனை !

மறுக்கவும் இல்லைநான் ஒரு துளியும்
மகிழவும் இல்லைநான் ஒரு நாளும் !
மறக்கவும் இல்லைநான் ஒரு கனவை
மறக்காமல் கூறினேன் ஒரு நிகழ்வை !

பழனி குமார்
( மேலே உள்ளப் படம் , நான் 1986ல் கோவா சென்றபோது எடுத்தது )

எழுதியவர் : பழனி குமார் (4-Aug-15, 3:49 pm)
பார்வை : 753

புதிய படைப்புகள்

பிரபலமான விளையாட்டுகள்

மேலே