காலாமின் கனவுகளோடு
ஆழ்கடல் உள்ளே ஏதோ ஒரு
சிப்பிக்குள் முத்தாக வேண்டியவரே!
ஆஷியம்மாவின் வயிற்றுக்குள்
சொத்தாய் பிறந்தவரே!
கனவுகள் காண சொல்லிவிட்டு
நனவாக்கும் நட்சத்திரம் ஆனவரே!
எங்கள் நம்பிக்கை நாயகனே!
இனி வரப்போகும் சமுதாயம்
உங்கள் வரலாற்றை படிக்கும் ஐயமில்லை
இத்தகைய மாமனிதன்
வாழ்ந்த காலத்தில் நாங்கள்
வாழ்ந்தோம் என்பதில்
எங்களுக்கு பெருமிதமே!
பாட்டி சொன்ன கதைகள்
கேட்டு வளர்ந்தது போன தலைமுறை!
காலமின் கனவுகள்
கேட்டு வளரும் இனி புதிய தலைமுறை!
புத்தன் இயேசு காந்தி வரிசையில்
பூலோகம் இனி உம்மை சேர்க்கும்!
விஞ்ஞானத்தின் விடிவெள்ளியே!
மெஞ்ஞானத்தின் இமயமே!
விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள் போல
மண்ணில் உலா வந்த மனிதக்கோளே!
அண்டைநாடுகளை கூட
அன்பாய் பார்க்க வைத்தாய்!
பண்பாய் மதிக்க வைத்தாய்!
பாகுபாடின்றி நேசிக்க வைத்தாய்!
உலகம் வியந்த மனிதன் நீ!
உலகை உலுக்கிய மரணம் தந்ததும் நீ!
உன்னால் கண்டுபிடிக்கப்பட்ட
அறிவியல் அதிசயங்கள்
அறிவியலையும் கடந்து
அழுகிறது இன்று!
படைத்தவன் பறித்துக்கொண்டன்
பதபதைக்குது நெஞ்சம்!
பரிதவிக்குது கொஞ்சம்!
அலைகடலும் அசையாமல்
ஆழ்ந்த துயரத்தில் இருந்தது!
கரைதனில் மக்கள் அலை
கடல்போல் காட்சியளித்தது!
இந்தியாவே அழுத்து! இதயத்தால் அழுதது!
சாதி மத மொழி இன பேதமின்றி!
உங்கள் விரல்கள் மீட்டிய வீணையின்
நரம்புகள் இன்னும் ஒலிகின்றன காற்றில்!
உங்கள் கனவுகளால் உயிர் பெற்ற கவிதைகள்
எங்கள் உயிருக்குள் ஊடுறுவி எங்களை புதுப்பிக்கின்றன!
வளரும் இந்தியா என்ற சொல்லை மாற்றி
வளர்ந்த இந்தியா என மாற சூளுரைப்போம்!
உங்கள் வழிகாட்டுதலின்படி உங்கள் கனவுகளின்
கைத்தாங்கலோடு களம் இறங்குகிறோம்!
-