உன்னை தொலைக்க போகிறேன் !
மழை வேண்டி யாகம் நடத்தும் ஊர் மக்கள்
மனசுக்குள் கண்ணீர் மழை
ஊமை காயங்கள்,உறைந்த இரத்தம்
ஊரை விட்டு வெளியேறுகிறேன் - நான்
உன் நினைவுகளை தொலைவில் சென்று
தொலைத்து வருவதற்கு
உன்னால் தானோ என்னவோ
இந்த ஊரிலும் வறட்சி !
என் உள்ளத்திலும் வறட்சி !