பாதுகாப்பு உச்சக்கட்ட பாதுகாப்பு

பாதுகாப்பு உச்சக்கட்ட பாதுகாப்பு
மதுபானகூடங்களுக்கும்
மதுபானம் குடிப்பவனுக்கும்
மதுபானம் விற்பவனுக்கும்
மதுபான பொருட்களுக்கும்
பாதுகாப்பு உச்சக்கட்ட பாதுகாப்பு

பாரம் சுமக்கும் ஏழைகளுக்கில்லை
பாடம் படிக்கும் மாணவர்களுக்கில்லை
பருவம் கண்ட பெண்களுக்கில்லை
பால்குடிக்கும் குழந்தைகளுக்கில்லை
பாதுகாப்பு இந்த பாதுகாப்பு

இங்கு
மதுமக்கள் சுதந்திரமாய் இருக்கிறார்கள்
குடிமக்கள் கைதிகளாய் இருக்கிறார்கள்

இந்நிலையை மாற்றுவோம்
மது ஒழிப்பை போற்றுவோம்
தமிழ் நாட்டை காப்பாற்றுவோம் !

எழுதியவர் : வாழ்கை கவிதை (4-Aug-15, 4:39 pm)
பார்வை : 105

மேலே