நகை, தாழ்

வெண்நகை வாயித ழாலெழில் மின்னிடு
மென்நகை பெய்திடு வாளவள் மெல்லிடைப்
பொன்நகைப் பூவித ழாடிடு மெம்மிருக்
கண்நகை பூட்டு மடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வெள்ளை அணியாகிய பற்களையுடைய தன் வாய் அதரங்களினால் அவள்,
ஒளிவீசும் புன்னகையைத் தருவாள்! அவளது மெல்லிய இடையில் தவழும்
பொன் ஆபரணத்தில் விளங்கும் பூவின் இதழ்கள், அவளின் அசைவினால் அசையும்!
மேற்சொன்ன இரு அழகான நிகழ்வுகள், எம் கண்நகையான கருமணிகள்
இரண்டினையும் தம் எழிலால் அசையாவண்ணம் பூட்டும்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்.

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (5-Aug-15, 2:33 pm)
பார்வை : 931

மேலே