மறக்க முடியாத அறை
அவரவர் வீட்டு வாசலில்
மங்கல மாவிலை தொங்க
செயமது வேண்டும் என்று
சுப்பிர பாதம் ஒலிக்க
நவமணி நாக ரீக
மங்கையர் மடியாய் உலவும்
தவமிகு சென்னையம் பதியில்
பயமிலா மயிலையில் அன்று
கையிலே பிடித்த கயிறும்
கயிற்றின் முனையில் நாயும்
பையிலே வைத்த தாளும்
தாளது காட்டும் படமும்
வெய்யிலே மேனி படாமல்
வேகமாய் நடந்த போது
மெய்யிலே என்னை மறந்தேன்
மேகமாய் அவளென் எதிரே.
இன்னனம் களித்து நானும்
இந்துஆ திரை நன் நாளில்
பொன்னவன் வியாழன் திரியும்
புனிதலக் கினத்தில் பிறந்த
தென்னவள் தனித் திருமகளே
மன்னவன் எனக்கு என்று
சின்னதாய் கண்ணை அடிக்க
கன்னத்தில் விழுந்தது அறையே.