கஜல்-10
எந்தன் எண்ணங்கள் யாவும் மின்னல்களாகி விட்டன வன்றோ!
நெஞ்சம் என்னும் வானத்தில் சீராக மின்னுகின்றன வன்றோ!!
நான் வாழ்வை நேசிப்பேனே மெய்யாக காதலிப்பதனாலே
முன்னேறும் பாதையில் ஆசைகள் விரைந்து சென்றன வன்றோ!
எண்ணியதே இல்லை என்றும் நான் இந்நிலை வரும் என அன்பே,
தோஷம் இல்லா சந்தோஷங்கள் தோன்றி சூழ்ந்து கொண்டன வன்றோ!
காலம் என்னும் மேடையில் நான் பாடி ஆட வந்தது வேளை
தன்மைகள் எல்லாம் இந்நாள் தாமாக பூத்து நின்றன வன்றோ!
ஏக்கம், துக்கம் என்றென்றும் இல்லாது போகவே வழி வேண்டும்
உன்னால் நம்பிக்கைகள் என்னில் நின்றிடாது பெய்தன வன்றோ!

