கனவுகள்

கனவுகள் யாவும்
கனவாய் போனதடி!
கன்னி உன்னை எண்ணி
கண்ட கனவுகள் யாவும்
நனவாய் மாறும் என
நான் கண்ட,
கனவுகள் யாவும்
கனவாய் போனதடி!!

அன்று,
கன்னி உந்தன்
கருவிழி தன்னை
கண்ணாடி என்று எண்ணி
என் முகம் பார்த்தேன் - அதில்
உன் முகம் பார்த்தேன்!
பாவை உன்னை
பார்த்த நாள் முதல்
பாவை நீ இன்றி
பாவி நானில்லை என்றேன்!
கவி பாடவும் செய்தேன்!

ஏனோ,
கன்னி உந்தன்
இதய கதவுகள் அடைப்பு!
அதை எதிர்த்து
என் கனவு தேசத்தில்
ஓர் அமைதி போராட்டம்!
ஓர் நாள் அல்ல,
ஓர் இரு ஆண்டுகள்!

அதுவரை, அங்கே,

காகிதத்தில்
கவிதைகள் அச்சிடப்பட்டன!
காணும் இடம் எங்கும்
அவை ஒட்டப்பட்டன!
இதய கதவுகள்
தினம் தினம்
தட்டப்பட்டன!

ஆர்பாட்டக்காரர்கள்
அமைதியாய் இருந்தனர்!
ஆர்பாட்டம் எங்கும்
அமைதியாய் நடந்தது!

சில தருணங்களில்
சந்தர்ப்பங்கள் சண்டையிட்டன!
விழிகள் நான்கும்
பேச்சுவார்த்தை நடத்தின!

சந்தர்ப்பங்கள் சண்டையிட்டதற்கு
வார்த்தைகள் வாதாடின!
வார்த்தைகள் வாதாடியதில்
வந்த தீப்பொறி
பற்றி எரிந்தது,
வாலிபத்தை பற்றி எரித்தது!

எரிந்த வெப்பத்தில்
சேர்ந்தே எரிந்தன
இதயத்தின் கதவுகளும்!

கதவுகள் கரைந்ததற்கு
காதல் கவிஞர்கள்
கவிகள் பாடினர்!
கதை கதையாய் பல
காரணம் கூறினர்!

அன்று முதல்,
என் இதய தேசத்தின்
மேகங்கள் யாவும்
பூ மழை பொழிந்தது!
ஓயாமல் ஓர் வருடம்
பொன் மாலை அவள் மேல்!!

ஏனோ இன்று,
ஒட்டி இருக்கும்
கண் இமை போல்
ஒட்டி இருந்த என்னை
வெட்ட நினைக்கிறாள்!!
என் செய்வேன் நான்!
என் கனவுகள் யாவும்
கனவாய் போனதடி கண்ணே!!!

எழுதியவர் : தமிழரசன் (6-Aug-15, 3:37 pm)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : kanavugal
பார்வை : 84

மேலே