துளித் துளியாய்+22-ரகு

நிலம் உதிரும் பூக்களை
அள்ளி முகர்ந்து
சிலிர்த்திருக்கலாம்,
நிழல் வேண்டி நின்ற
பற்பல சுவாசங்கள்....
ஆயிரக் கணக்கான
இலைகளின்
ஸ்பரிசங்களை விட்டுத்
தனியே நழுவி விழும்
ஒற்றைப் பூவின்
உயிர்வலி வாங்கி,
அவ்வழியே
கடந்து போகிறது
என் கவிதை மட்டும்...!!

எழுதியவர் : சுஜய் ரகு (6-Aug-15, 3:30 pm)
பார்வை : 63

மேலே