பிரேதக் காடு - திகில் கதை

டர்ர்ர்ர்....

இருளைக் கிழித்துக்
கொண்டு விரைந்து கொண்டிருந்தது அந்த பைக்..

அந்த பாதை
மயானத்திற்க்கு செல்லும் பாதை,,

பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவன்
கிஷோர் 25 வயது
இளைஞன்....

நேரம் இரவு 1.00
மணி.....

சர்க்க்கர்க் தட் தட்
வண்டி தனது உறுமலை
நிறுத்திக் கொண்டது.....

மயானத்து வாசலில்
இறங்கினான் அவன்....
கதவைத் திறந்தான்....

க்ரிரிரிச்....


அன்று இரவு
11.00 மணி நண்பர்கள்
பேசிக் கொண்டிருந்தனர்...
எதை பற்றியெல்லாமே பேசி
பேயைப் பற்றி பேசிக்
கொண்டிருந்தனர்.....

ஏன் மச்சி பேய் இருக்கா
இல்லையா.?

இருக்கு ஆனா இல்லை...

இப்படி சொன்ன எப்படிடா
கட் அண்ட் ரைட்டா
சொல்லுங்க டா.....

இருக்குடா....

நீ பார்த்துருக்கியா..?
இது கிஷோர்..

இல்ல ஆனா
ரொம்ப பேர் அதை
பார்த்துருக்காங்களாம்...

அட போடா எல்லாம்
மனப் பிரமை தான்....
என்றான் கிஷோர்,

ஏன்டா உனக்கு
பயமே இல்லையா..?

பேய்னு ஓண்ணு
இருந்தா தானடா பயப்பட...
அதனால இந்த மாதிரி
விஷயத்துக்கு பயப்படலாம்
மாட்டேன்....

சரி நீ உண்மையிலே
பயப்படலனா...
இன்னைக்கு நைட் 12.00
மணிக்கு சுடுகாட்டுக்கு
போய் அங்க எரிற
சிதையில இருந்து ஓரு
கொள்ளி கட்டை கொண்டு
வா...
கொண்டு வந்தா நான்
உனக்கு ஆயிரம் ரூபா
தர்றேன் என்ன சொல்ர...?

ஓகே ஆயிரம் ரூபா
ரெடியா எடுத்து வை....

ச ரி......







க்ரிரிச்.........


கதவைத் திறந்து உள்ளே
நுழைந்தான் கிஷோர்...

சுற்றிலும் அமைதி...
பேயமைதி...

க்ளா.... க்
எங்கோ கோட்டானின் அலறல்
சுவர்க் கோழிகளின்
ரீங்காரம்...

தூரத்தில் ஒரு சிதை
எரிந்து கொண்டு இருந்தது...
அதை நோக்கி நடந்தான்....

சர்ர்ர்க..... சர்க்....

காய்ந்த சறுகுகளின்
ஓசை கூட பயமுறுத்தியது...

காற்றில் பிண வாடை..


சர்ர்க்.... சர்ர்க்... தட்
தொம்.....

கால் இடறி எதன் மீதோ
தொப் என விழுந்தான்...

எழுந்து ஓட்டிய
மண் துளிகளை தட்டியபடி
விழுந்த இடத்தை
பார்த்தான்...

அது பிணம்
புதைத்த மண் மேடு

ஹோ...சை....
இது மேலயா விழுந்தேன்...

சிதையருகே
சென்றான்....

விறகு குவியலின்
உள்ளே பிணம் எரிந்து
கொண்டிருந்தது...

வயிற்றை புரட்டும்
பிண நாற்றம்....

குனிந்து கொள்ளிக்
கட்டையை எடுத்தான்

அதே நேரம்

தடக் என
பிணம் எரியும்
நெருப்புக் குவியலில்
இருந்து எழுந்து
அமர்ந்தது...

ஹோ.....' என
கிஷோர் மயிர்கால்கள்
குத்திட்டு நிற்க்க.....

அந்த பிணம் இரு கைகளையும்


வா....வா....
என நீட்டியது,

ஆ ஆ ஆ ஆ..

கிஷோரின் அலறல் மயான
நிசப்தத்தை குலைத்து
எழுந்து அடங்கியது..


(பின்குறிப்பு
சிதை எரியும் பொழுது
வெப்பம் காரணமாக பிணம்
விரைக்கும்.. அது தான்
பிணம் எழுவது போல
தோன்றும்)

எழுதியவர் : கவிஞன் அருள் (6-Aug-15, 9:14 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 4678

மேலே