குடிகாரன்
மது வேண்டாம் மூடிவிடு
மது குடித்து விட்டெறிந்த
வெற்றுப் போத்தல்களை
பொறுக்கி எடுத்து விற்றுத்தான்
உலைதன்னில் வேகுதடா சோறு
போதை தெளியும் முன்னே
போட வேண்டும் சமையல்
மனைவி படும் துயரம் கொஞ்சமல்ல
பிள்ளைகளுக்கு தெரியாமல்
மறைத்து உன் மானம் காத்திடுவாள்
பத்தினியாய் அவளிருந்தும்
பட்டினியாய் அவளிருந்தும்
உந்தனுக்கு உணரலியே
குடித்து விட்டால் உன் நிலைமை
தலைகீழாய் மாறிவிடும்
குடிப் பழக்கம் குடும்பத்தை
குட்டி சுவராக்கி விடும்
குடியை விட்டு விடு குடி கார கூட்டம்
உன்னை நெருங்காது செய்து விடு
மது வேண்டாம் மறந்து விடு
மனைவி மக்கள் குடும்பம் அதை மனதில் வை
மனைவி படும் கவலை மாறுவது
நீ மறந்து விடும் மதுவாலே
தீண்டாமை மதுவாக தெரிந்து விடு
குடும்பங்கள் குதூகலத்தில் வாழவிடு
குடிகாரன் என்ற குணப் பெயரை மாற்றி விடு