ஜனனப்பிசாசு

சாத்தானின்
மரபணுக்கள்
புகுத்திய‌
சர்ப்பங்களின்!!

இரட்டை நாக்குகள்
நீளும் திசையில்
அவனும் அவளும்
முத்தமிட்டு
கொண்டிருந்தனர்!!!

சாந்தமாய்
படுத்துக்கொண்டது
பாம்பு!!
அவர்கள் மறைந்து
முத்தமிட்ட
பற்றை பற்றி
எரியத்தொடங்கிற்று!!

கடவுளும் சாத்தானும்
சதுரங்க விளையாட்டின்
இடையில்
மதுக்கோப்பையோடு
ரசித்துக்கொண்டனர்
எரியும் தீயை.....

காலம் கழித்து
ஓரிடத்தில்
குழந்தையின்
அழுகை..

யாரோ கடவுளை
சபித்துவிட்டு
சாத்தான்களை
போற்றிப்போயினர்..

எழுதியவர் : புலவூரான் ரிஷி (7-Aug-15, 12:00 am)
பார்வை : 63

மேலே