வாக்காளப் பெருமந்தைகளே,,,,,,,,
"உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை
இருந்தாலும் சொல்கிறேன்"
கூட்டம் அமைதி காத்தது.
"நீங்கள் குடிக்கின்ற காசில்தான்
உங்களை மகிழ்விக்க
இலவசங்கள் கொடுக்க முடியும்"
கூட்டம் மௌனமாய் ஆமோதித்தது.
"நீங்கள் குடிக்கின்ற உரிமையை பாதுகாக்க
உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்"
கூட்டத்தில் மகிழ்வலைகள்.
"தங்கு தடையில்லா மின்சாரம், மன்னிக்கவும்
மதுவிநியோகம் வழங்க வகை செய்வோம் "
கூட்டத்தில் ஆர்ப்பரிப்பு.
"ஆனால் எனதருமை மக்களே,
நீங்கள் குடித்தே உடம்பை
கெடுத்துக் கொள்ளக் கூடாது"
கூட்டம் அதிசயத்து போனது.
"ஆம்;வரும் தேர்தலில்
எங்களுக்கு வாக்களிக்க
நீங்கள் உயிரோடிருப்பது அவசியம்
என்ன சரியா"
மந்தைக் கூட்டம்
தலையசைத்து சரியென்றது.
................................வெடி வெடித்து,
பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது ;
சந்தோஷமாக.