என் மௌனங்களின் மறுபரிசீலனை

எரிச்சல்களைத் தவிர்க்கவே...
இறுக்கம் காட்டினேன்;
ஏமாற்றங்களைத் தவிர்க்கவே
திசைகளை மாற்றினேன்..
வலிகளை மறைக்காவே..
வலிந்து வந்து சிரித்தேன்...
எல்லாம் செய்தும் ,
எதுவும் சரிப்படாததால்..
மௌனங்களோடு ஒப்பந்தம் செய்தேன்...
எதுவும்..
என்னை ..
நான்.. நானாக இருக்கவிடவில்லை...

இனி...
அடிக்கிற உலகத்தை அடித்து..
சிரிக்கும் முகங்களின்முன் சிரித்து..
போலியாய்...
பொருளற்ற ஒரு வாழ்க்கைக்கான ,
பொருள் தேடப் போகிறேன்!
கலைக்கப்பட்ட என் மௌனங்களின் முன்
மரித்துப் போன மனிதம் கிடக்கத்தான் செய்யும்..

எழுதியவர் : வாழ்க்கை.. (7-Aug-15, 10:40 am)
பார்வை : 78

மேலே