சருகுகள்
இயலாமையின் உதிர்வுகளில்
காலத்தின் இசைவுகளின்படி -
இயற்கையானதாய் சருகுகளின் மேடு ..........
இயற்கையாய் உதிர்ந்ததும்
இசைந்து உதிர்ந்ததும்
உதிர்க்கபட்டதும் ஒரே கும்பலில் ...........
வளருகின்ற வாரிசுகளின்
மறைமுக விருப்பங்களின்படி
பச்சை இலைகள் சருகுகளாய் ............
வேர்களின் ஈர்ப்பினால்
சருகுகள் மிக விரைவிலே
எருதாய்............
மனிதனின் மானுட மறைவில்
எத்தனையோ உறவு தொலைப்பில்
உயிர்தந்த உறவுகளும் சருகுகளாய் ...........
பழுப்பதில் பாவமில்லை
இலைகள் பழிப்பதிலேயே
உதிர்ந்து சருகுகளாய் ............
உயிர்தந்த உன்னத உறவுகள்கூட
உதாசினத்தின் உச்சத்தால்
அழுகைகளின் அடையாளங்களோடு சருகளாய் .............
விரைவிலே மறக்கும்
நன்றிகள் கூட வாழ்க்கையின் விதியை
ஓர் நாள் உணர்த்தும் ...........
அன்று அவர்களும் சருகுகளாய் !

