ஒற்றைக்குச்சியின் மேல் தவமிருக்கும் காக்கா

ஆள் அரவமில்லாத பள்ளத்தாக்கில்
அமைதியாக ஓடும் ஒரு நதி...

ஒற்றைக்காக்கா
எங்கிருந்தோ வந்து
நதியின் நடுவிலிருந்த
ஒற்றைக்குச்சியில்
அழகாக உட்கார்ந்தது....

அதற்கு தேவை
உணவா... அமைதியா...
அறிய முடியவில்லை

அவ்வப்போது
நதியின் தாலாட்டால்
அந்தக்குச்சி அசைந்து
மெலிதாக ஆட்டம் கொடுத்தது....

அந்த இதமான
தூளி ஆட்டத்தில்
நிம்மதி கொண்டிருந்தது காக்கா....

அந்தக்காக்காவும் நானும் ஒன்று தான்..!

ஆம்....

உலகமெனும் பெரிய பள்ளத்தாக்கில்
ஓடுகின்ற ரயிலெனும் நதியில்
நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தைச் சந்திக்க
ஊருக்கு தனியாகச் சென்று கொண்டு
நினைவுகளெனும் தாலாட்டில் லயித்து
இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Aug-15, 10:56 am)
பார்வை : 337

மேலே