சுற்றிக் கொண்ட போத்தலின் மூடி
செல்போன் டவரில்
ஏறி நின்று
மிரட்டி விட்டோம்...
பசி பட்டினி என்று
அடுத்த கட்டமும்
நகர்ந்து விட்டோம்...
வன்முறைக்குள்ளும்
போய்விட்ட
மாணவர்களையும்
முன்னிருத்தி விட்டோம்...
அடித்து அடி வாங்கி
அத்து மீறலும்
நடந்து விட்டது...
யுத்தம் செய்து ரத்தம்
கக்கி உயிரும்
விட்டு விட்டோம்...
பலி எதிர்ப்பக்கமும்
என்று
எரித்தும் காட்டி விட்டோம்...
போதை தெளிய
நேரமாகும் என்பதை உணராத
எங்களுக்கு
தலை சிலுப்பியாவது
காட்டுங்கள்...
காத்திருக்கிறோம்,
சுற்றிக் கொண்ட போத்தலின்
மூடி போல...
கவிஜி