யாரோ அவள்

இங்கிருந்து சுமார்
ஆயிரம் ஒளி ஆண்டுகள் கடந்து
நீல நிறத்திலே மின்னிடும்
அழகிய கிரகம் ஒன்று உள்ளதாம்

ஒருவேளை இந்நேரம் அங்கே ,
என்னைப் போலவே சாயல் கொண்ட
கவிபாடிடும் பெண்ணொருத்தி..
இது போலவே என்னை எண்ணி
ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பாளோ..?!

இளமஞ்சள் யவானா கிரகத்தைச்
சேர்ந்த என் பெயர் 'திரானா'
அவளின் பெயர் என்னவாக இருக்கும்...!?!

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (8-Aug-15, 6:54 pm)
Tanglish : yaro aval
பார்வை : 130

மேலே