மரணம் பெரியதில்லை

உயிரே உயிரே
வலிகள் பொறுத்துவிடு......!
விழியின் வழியே
பயணம் நிறுத்திவிடு......!
எண்ண வாசலில்......!
வண்ண கோலங்கள்......!
வந்து கலைத்ததே
கரும் மேகங்கள்......!
விதியோடுதான் செல்லும் காலங்கள்.......!

ஆசை சிறகுகள்
விரிக்கும் தருணங்கள்
வானம் மறைந்ததென்ன.......!

கானல் நீரிலே
காதல் ஓவியம்
நானும் வரைந்ததென்ன........!

மேகம் கருத்திடும்
தருணம் யாவுமே
மழையும் வருவதென்ன......!

சோகம் உருக்கிடும்
நிமிடம் யாவுமே
விழியும் பொழிவதென்ன.......!


விழிகள் எழுதிய
காதல் கடிதங்கள்
இதய நதியில் மிதக்க.....!

விடியல் பொழுதிலும்
உனது நினைவுகள்
உயிரில் உறைந்து கிடக்க......!

சிறிய இதயம்தான்
சிலுவை தாங்குமா
கதறி அழுகிறேன் நானே.......!

திரியும் இன்றியே
தீபம் எரியுமா
உன் பதிலை சொல்லு மானே......!

உரியின் தோட்டத்தில்
கனவு பூக்களை
உதிரம் ஊற்றியே வளர்த்தேன்......!

அது மலரும் முன்னமே
உதிர்ந்து போவதா ?
இதயம் கதறியே துடித்தேன் .......!

உளியின் ஓசையில்
கல்லின் கதறல்கள்
வெளியில் கேட்பதில்லை......!

உயிரின் ஆசைகள்
உடைந்து போகயில்
மரணம் பெரியதில்லை.......!

எழுதியவர் : பாக்யா (8-Aug-15, 8:43 pm)
பார்வை : 378

மேலே