பெண்ணே எழுந்திரு
பெண்ணே எழுந்திரு!
எழுந்திரடி பெண்ணே எழுந்திரு,
உயிறற்ற ஜடம் போல
உலவிக்கொண்டிருக்கும் பெண்ணே,
உடனே எழுந்திரு!
உள்ளம் ஒன்று உனக்கும் உண்டு,
என்பததையரியாமல் உனது பெற்றோரும்
செல்வத்துடன் உனையும் சேர்த்து,
அன்னியனொருவனுக்கு உரிமையாக்கினரே!
உடலையே மட்டும் நோக்கி,
தன்னிச்சை பூர்த்தி செய்து,
தனக்கொரு மகன் தரும்வரை,
மகப்பேறு எனும் சுழலில் சுழற்றி அடித்தனறே!
பகலில் பற்று கொள்ளாமல்,
இரவில் மட்டும் மோகம்கொண்டு,
அண்டிடும் அறற்றலதில் விடுபட்டு,
எழுந்துவிடு பெண்ணே, எழுந்து விடு;
ராணி லட்சுமிபாய் போன்ற வீராங்கனைகளை,
உவமைக்காட்டி பேசி, வீடு திரும்பி உனை,
வேசிபோல் நடத்தும் மிருகங்களை அடக்க,
உயிர் பற்று பெண்ணே உடனே எழுந்துவிடு;
பெண்ணென்றால் சம உரிமை,
என்ற கோஷங்களை எரித்தெறு,
ஆண்களைவிட மேன்மேலும் உயர்ந்தவள் நானென,
கூவி நீ பெண்ணே, உடனே உயிர்பெற்று எழுந்திதரு!