மனசாட்சி

தேடாதே! மனிதா
உன் உள்ளேயும் நானில்லை..
வெளியேயும் நானில்லை..
வீரம் இல்லா உன்னிடத்தில்
வீற்றிருக்கவும் விருப்பமில்லை..
மனிதம் இல்லா மரக்கட்டை பற்ற
தொற்றுச்செடியும் நானில்லை..
முயன்று தோற்றிருந்தால்
கர்வத்தால் கர்ஜித்திருப்பேன்..
நீயோ.. குனிந்து குனிந்து
கூனன் ஆகிவிட்டாய்..
குற்றங்களை... கண்டு கண்டு
குருடன் ஆகிவிட்டாய்..
அக்கிரமத்தை... அனுமதித்து அனுமதித்து
அரக்கன் ஆகிவிட்டாய்..
இனி மார்தட்டிக்கொள்ள என்ன இருக்கிறது
உன் மனசாட்சி நான் தான் என்று..